முகப்பு தமிழ்நாடு மோடிக்கு எதிராக சமூக ஆர்வலர் அதிரடி – பரமக்குடியில் பிரச்சாரம்

மோடிக்கு எதிராக சமூக ஆர்வலர் அதிரடி – பரமக்குடியில் பிரச்சாரம்

மதுக்கடைகளை ஒழிக்க வேண்டும் என போராட்டத்தை தொடங்கிய சமூக ஆர்வலர் நந்தினி, நேற்று மாலை (டிச.14) பிரதமர் நரேந்திர மோடியை கண்டித்து, பரமக்குடியில் பிரச்சாரம் செய்தார்.

மதுக்கடைகளுக்கு எதிராகவும், சமூகப் பிரச்சனைகளுக்காகவும், மத்திய – மாநில அரசுகளின் மக்கள் விரோத நடவடிக்கைகளை கண்டித்து, சட்டக்கல்லூரி மாணவி நந்தினி தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார். பல வழக்குகளை சந்தித்து வரும் நந்தினி தனது 23 வயதில் இருந்து,வாழ்நாளில் மக்கள் பிரச்சனைகளுக்காக ஒற்றை ஆளாக போலீசாரின் அச்சுறுத்தலுக்கும், அடக்குமுறைக்கும் பயப்படாமல் துணிச்சலுடன் போராடி வருகிறார்.

இந்தவேளையில், சமீபத்தில் வராக்கடன்களை மத்திய அரசு தள்ளுபடி செய்தது. இதனை கண்டித்து, பிரதமர் மோடியின் நண்பர்களுக்கு தள்ளுபடி செய்யப்பட்ட வங்கி கடன் ரூ.10.72 லட்சம் கோடியை முழுமையாக வசூல் செய்து, அந்த பணத்தில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும். டாஸ்மாக் மது உட்பட தீங்கு விளைவிக்க கூடிய அனைத்து போதைப் பொருட்களையும் முற்றிலும் தடை செய்ய வேண்டும் என வலியுத்தி நேற்று மாலை இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் பிரச்சாரம் மேற்கொண்டார். இதையறிந்த போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று, அவரை கைது செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Exit mobile version