விஜய் டிவியின் ஹிட் தொடர்களில் ஒன்றான பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் அடிக்கடி நடிகர்கள் மாறி வருகின்றனர். இதுவரை 5 கதாபாத்திரங்களுக்கான நடிகர்கள் மாறிவிட்டனர். இருப்பினும் இந்த தொடர் குடும்பங்களுக்கு பிடித்த தொடராக தொடர்ந்து வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில், ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நீண்ட நாட்களாக நடித்து வந்த சாய் காயத்ரி தற்போது சீரியலை விட்டு விலகியுள்ளார். ஏற்கனவே, இந்த கதாபாத்திரத்தில் முதலில் வைஷாலியும் அதன்பின் வீஜே தீபிகாவும் நடித்து வந்தனர். இதில் தீபிகாவின் முகத்தில் சரும பிரச்சனை அதிகம் இருந்ததால் அவர் தொடரிலிருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக தான் சாய் காயத்ரி நடித்து வந்தார். இந்நிலையில் தற்போது சாய் காயத்ரி திடீரென இந்த சீரியலை விட்டு விலகியதாக தகவல் வெளியானது. இதனால் சாய் காயத்ரி விலகியது உண்மையா? என ரசிகர்கள் பலரும் நேரடியாகவே சாய் காயத்ரியின் இன்ஸ்டாகிராமில் கேள்விகள் கேட்டனர்.
ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த சாய் காயத்ரி “ ஆமாம் நான் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரிலிருந்து விலகிவிட்டேன். ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடிப்பது எனக்கு இனிமேல் நலமாக இருக்காது. அது எனக்கும் எனது கேரியருக்கும் நல்லதல்ல. எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி. எனது இந்த முடிவுக்கு மரியாதை அளித்த விஜய் டிவிக்கும் நன்றி“ என கூறியுள்ளார். இதனையடுத்து மீண்டும் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் வீஜே தீபிகா நடிக்கவுள்ளார்.
