பனி மூட்டம் அதிகமாக இருந்ததால், இன்று சென்னையில் இயக்கப்பட்ட ரயில்களின் வேகம் குறைவாக இருந்தது.
நேற்று இரவு முதல் பனி மூட்டம் அதிகமாக இருந்தது. இன்று அதிகாலையில் மேலும் அதிகரித்தது. சாலையில் செல்லும் வாகனங்கள், எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் இருந்ததால், முகப்பு விளக்கை எரியவிட்டு சென்றன.
இந்நிலையில், சென்னையில் இன்று (டிச 15) அதிகாலை முதலே பனிமூட்டம் அதிகரித்து இருந்தது. இதன் காரணமாக அரக்கோணம், சோளிங்கர், நெமிலி, காவேரிப்பாக்கம், ஆற்காடு உள்பட பல்வேறு இடங்களில் எதிரில் உள்ள வாகனங்கள் தெரியாததால் முகப்பு விளக்குகளை எரியவிட்டு வாகன ஓட்டிகள் செல்கின்றனர்.
மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரக்கோணம் – சென்னை செல்லும் ரயில்களின் வேகம் குறைக்கப்பட்டது.