முகப்பு அண்மை செய்திகள் ரயில் கட்டண சலுகை இல்லை – மத்திய அமைச்சர் அதிரடி பதில்

ரயில் கட்டண சலுகை இல்லை – மத்திய அமைச்சர் அதிரடி பதில்

ரயிலில் பயணம் செய்யும் மூத்த குடிமக்களுக்கு, எவ்வித சலுகையும் கிடையாது என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். இதனால், மூத்த குடிமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

மாற்றுத் திறனாளிகள், மூத்த குடிமக்களுக்கு ரயில்களில் பயணம் செய்வதற்கு குறிப்பிட்ட சதவீதம் சலுகை அளிக்கப்பட்டது. கடந்த 2020ல் ஏற்பட்ட கொரோனா தொற்று காரணமாக ரயில்களின் சேவை நிறுத்தப்பட்டன. பின்னர், தொற்று பரவல் குறைந்ததும், மீண்டும் படிப்படியாக ரயில்கள் இயக்கப்படுகின்றன.

இதற்கிடையில் மாற்றுத் திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களக்கு ரயில் பயணத்தில் அளிக்கப்பட்ட கட்டண சலுகை நிறுத்தப்பட்டது. 2 ஆண்டுகள் கடந்த பின்னரும், அவர்களுக்கான சலுகை வழங்கப்படாமல் உள்ளது

இந்நிலையில், ரயில்களில் மூத்த குடிமக்களுக்கு கொரோனா காலகட்டத்தில் நிறுத்தப்பட்ட 50 சதவீத கட்டண சலுகை, மீண்டும் எப்போது அளிக்கப்படும் என நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பினர்.

அதற்கு, மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதில் அளித்து கூறுகையில், ரயில் பயணிகள் சேவைக்காக ரயில்வே துறை சார்பில் ரூ.59 ஆயிரம் கோடி மானியம் அளித்துள்ளது. இது பெரிய தொகையாக உள்ளது. எனவே நிதிநிலையை கருத்தில் கொண்டு இப்போதைக்கு மூத்த குடிமக்களுக்கு, சலுகை அளிக்க முடியாது என்றார்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Exit mobile version