தாய்லாந்து மன்னர், ராணி ஆகியோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தவேளையில், இளவரசிக்கு இதய நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து அவர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தென் கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்தின் மன்னர் மஹா வஜிரலோங்கோர்ன். இவரது முதல் மனைவியின் ஒரே மகள் இளவரசி பஜ்ராகிதியாபா மஹிடோல் (44). கடந்த வாரம் பாங்காக் அருகே நடந்த ஒரு நிகழ்ச்சியில் இளவரசி பஜ்ராகிதியாபா மஹிடோல் கலந்து கொண்டார். அப்போது அவர் திடீரென மயங்கி விழுந்தார்.
உடனே அங்கிருந்தவர்கள், மருத்துவரை அழைத்து வந்து சிகிச்சை அளித்தனர். பின்னர் அவருக்கு பரிசோதனை செய்ததில், இதய தொற்று ஏற்பட்டது என தெரியவந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து தாய்லாந்து அரண்மனை தரப்பில் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது.
இளவரசி இளவரசி பஜ்ராகிதியாபா மஹிடோலின் உடல்நிலையில் முன்பு இருந்ததைவிட சற்று முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனாலும், அவரது இதய துடிப்பு சரிவர இயங்கவில்லை. இதனால் இதயத் துடிப்பை மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர். அவரது நுரையீரல், சிறுநீரகம் ஆகியவற்றிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவற்றை மேம்படுத்த தொடர்ந்து முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. மருத்துவக்குழுவுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு வழங்கியுள்ளது என கூறப்பட்டுள்ளது.