முகப்பு அண்மை செய்திகள் டிபிஐ வளாகத்துக்கு க.அன்பழகன் பெயர் – முதல்வர் மு.க.ஸ்டாலின் சூட்டினார்

டிபிஐ வளாகத்துக்கு க.அன்பழகன் பெயர் – முதல்வர் மு.க.ஸ்டாலின் சூட்டினார்

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கல்வி துறை அலுவலகமான டிபிஐ வளாகத்துக்கு, க.அன்பழகன் வளாகம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பெயர் சூட்டினார்.

தமிழகத்தில், அரசு கட்டிடங்கள், அலுவலகங்கள், மேம்பாலங்கள் என புதிதாக அமைக்கப்படும் இடங்களுக்கும், பல்வேறு தரப்பினர் வந்து செல்லும் முக்கிய பகுதிகளுக்கு தலைவர்கள் பெயர் சூட்டுவது வழக்கம். அதன்படி சென்னையில் அண்ணா மேம்பாலம், மூப்பனார் பாலம், முரசொலி மாறன் பாலம், பெரியார் பாலம் என பாலங்களுக்கு பெயரிடப்பட்டுள்ளது. அதேபோல் நாமக்கல் கவிஞர் மாளிகை உள்பட பல்வேறு தலைவர்களின் பெயர்களிலும் கட்டிடங்கள் உள்ளன.

இந்நிலையில், சென்னை நுங்கம்பாக்கம் கல்லூரி சாலையில் பள்ளி கல்வி இயக்குனர் அலுவலகம் உள்பட அனைத்து தொடக்க கல்வி அலுவலகமும் செயல்படுகிறது. இந்த வளாகத்துக்கு டிபிஐ என பெயர் இருந்தது. தற்போது, திமுக ஆட்சிக்கு வந்ததும் இந்த வளாகத்துக்கு பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகம் என்று பெயர் சூட்டப்படும் என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. மேலும், பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு வளைவும் அங்கு அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து, அரசு சார்பில், இப்போது அன்பழகனின் நூற்றாண்டு நினைவு விழா கொண்டாடப்படுகிறது. இந்தவேளையில், டிபிஐ முகப்பில் அவரது பெயரில் நூற்றாண்டு வளைவு கட்டி முடிக்கப்பட்டு, அதனை, முதல்வர் மு.க.ஸ்டாலின் (டிச.19) திறந்து வைத்தார். மேலும் பள்ளி கல்வி வளாகத்துக்கு (டி.பி.ஐ.) பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகம் என பெயர் சூட்டினார்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Exit mobile version