முகப்பு அண்மை செய்திகள் பரந்தூர் விமான நிலையம் குறித்து அமைச்சர்கள் ஆலோசனை

பரந்தூர் விமான நிலையம் குறித்து அமைச்சர்கள் ஆலோசனை

தமிழகத்தில் மக்கள் அதிகரித்து வருவதால், மாநிலத்தின் பகுதிகளில் ஏராளமான பன்னாட்டு தொழிற்சாலைகள், நிறுவனங்கள் உருவாகி வருகின்றன. இங்கு பல்வேறு மாநிலங்கள் மற்றும் நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் பணியாற்றிகின்றனர். இதனால், அவர்களுக்கு, அதே பகுதியில் குடியிருப்புகளும் உருவாகி கொண்டு இருக்கின்றனர்.

அதேநேரத்தில் மக்கள் தொகை அதிகரிப்பதாலும், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாலும் பலர் விமான சேவையை நாடுகின்றனர். இதைதொடர்ந்து, சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள விமான நிலையத்தில், நாளுக்கு நாள் விமான பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. இதையொட்டி அங்கு போதுமான விமானங்கள் நிறுத்துவதற்கு இடம் இல்லை. இதைதொடர்ந்து விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய மத்திய அரசு முடிவு செய்தது. இதற்கான நிலத்தை கையக்கபடுத்தி தரும்படி, மாநில அரசிடம் கேட்டு கொண்டது.

அதன்பேரில் காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே விமான நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. இதற்கு கிராம மக்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். பல ஆண்டுகளாக விவசாயம் செய்து வாழ்வாதாரத்தை காப்பாற்றி வரும் தங்களது நிலத்தை தர முடியாது என கூறி வருகின்றனர். இந்தவேளையில், பரந்தூரில் விமான நிலையம் அமைக்க மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.

ஆனால், பரந்தூர் விமான நிலையம் அமைப்பதால் தங்களின் இருப்பிடமும், வாழ்வாதாரமான விளைநிலங்களும் பாதிக்கப்படும் என கூறி பரந்தூர் விமான நிலையம் அமைய பகுதி கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சுமார் 4,500 ஏக்கர் பரப்பளவில் அமைய உள்ள விமான நிலையத்துக்கு ஏகனாபுரம், பரந்தூர், நெல்வாய் உள்பட 12 கிராமங்களில் உள்ள விளை நிலங்கள், நீர் நிலைகள், குடியிருப்புகள் கையகப்படுத்தப்பட உள்ளது. இதற்கான பணிகளில் தமிழக அரசும் தீவிரமாக இறங்கியுள்ளது.

புதிய விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மத்திய மற்றும் மாநில அரசுகளை கண்டித்து ஏகனாபுரம், நெல்வாய் ஆகிய கிராமங்களை சேர்ந்த கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கிராமக்களின் 146வது நாள் போராட்டத்தின் ஒரு பகுதியாக பரந்தூரில் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுப்பதற்காக கிராம மக்கள், கருப்பு கொடியுடன் பேரணியாக சென்றனர். இந்த பேரணியில், 13 கிராமங்களை சேர்ந்த மக்கள் இந்த பங்கேற்றனர்.

இந்நிலையில், பரந்தூர் விமான நிலையம் அமைக்க நிலம் எடுப்பதற்கு கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் (டிச.20) ஆலோசனை கூட்டம் நடக்கிறது. அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, தா.மோ.அன்பரசன் ஆகியோர் தலைமையிலான குழுவினர் 13 கிராம மக்களின் எதிர்ப்பு குறித்த விவரம், நிலம் கையகப்படுத்தும் பணி, இழப்பீடு உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கின்றனர்.

விமான நிலையம் அமைக்க எடுக்க வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தும் முடிவு செய்யப்படுகிறது. இக்கூட்டத்தில் போராட்டக் குழு பிரதிநிதிகள் இடம் பெறவும் வாய்ப்பு உள்ளது. காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகள் பங்கேற்கிறார்கள்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Exit mobile version