முகப்பு அண்மை செய்திகள் சட்டோகிராம் கிரிக்கெட் டெஸ்ட் – முன்னிலையில் இந்தியா

சட்டோகிராம் கிரிக்கெட் டெஸ்ட் – முன்னிலையில் இந்தியா

சட்டோகிராமில் நடந்து வரும் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில், வங்கதேச அணி ஆட்டமிழந்தது. இதனால், முன்னிலையில் உள்ள இந்திய அணி மீண்டும் பேட்டிங்கை துவங்கியது.

சட்டோகிராமில் நடந்து வரும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டில் இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் இன்னிங்சில் 133.5 ஓவர்களில் 404 ரன்களை இந்திய அணி எடுத்தது. அதில் ஷ்ரேயஸ் ஐயர் 86, அஸ்வின் 58 ரன்கள் எடுத்தனர். தைஜுல் இஸ்லாம், மெஹிதி ஹசன் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.

2ம் நாள் முடிவில் வங்கதேச அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. ஆனால், 44 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் மட்டுமே எடுத்தது. மெஹித் ஹசன் 16, எபடாட் 13 ரன்களுடன் களத்தில் இருந்தனர். வங்கதேச அணி 2 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் 271 ரன்கள் பின்தங்கியது.

இந்நிலையில் 3வது நாளான இன்று வங்கதேச அணி 55.5 ஓவர்களில் 150 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. எபடாட் 17 ரன்களில் குல்தீப் பந்திலும் மெஹிதி 25 ரன்களில் அக்‌ஷர் படேல் பந்திலும் வெளியேறினர். குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளையும் சிராஜ் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள்.

இதைதொடர்ந்து, இந்திய அணி முதல் இன்னிங்சில் 254 ரன்கள் முன்னிலை பெற்றதால் வங்கதேச அணி ஃபாலோ ஆன் ஆனது. இதையடுத்து இந்திய அணி, 2வது இன்னிங்சில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. 3வது நாள் உணவு இடைவேளையின்போது இந்திய அணி, 15 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 36 ரன்கள் எடுத்துள்ளது. ராகுல் 20, ஷுப்மன் கில் 15 ரன்களுடன் களத்தில் உள்ளனர். இந்திய அணி தற்போது 290 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Exit mobile version