முகப்பு அண்மை செய்திகள் கூலி தொழிலாளியின் மகன் அமெரிக்கா செல்ல ஆங்கிலம் படிக்க வேண்டும் – இந்திக்கு எதிராக ராகுல்...

கூலி தொழிலாளியின் மகன் அமெரிக்கா செல்ல ஆங்கிலம் படிக்க வேண்டும் – இந்திக்கு எதிராக ராகுல் அதிரடி பேச்சு

பாஜ அரசு இந்தியை திணிக்கிறது. விவசாய தொழிலாளியின் மகன் வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டுமானல், ஆங்கிலத்தை படியுங்கள் என ராகுல் காந்தி பேசினார்.

இந்திய ஒற்றுமையை வலியுறுத்தி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி பாரத்ஜோடோ யாத்திரையை கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை தொடங்கினார். தற்போது அவர், ராஜஸ்தானில் நடைபயணம் சென்று கொண்டிருக்கிறார். இதையொட்டி அவர், ஆல்வார் பகுதியில், பொதுமக்களிடம் பேசியதாவது.

பாஜகவில் எங்களை எதிர்க்கும் தலைவர்கள், எங்கு சென்றாலும், ஆங்கிலத்துக்கு எதிராக பேசுகின்றனர். பள்ளிகளில் பெங்காலி, இந்தி இருக்க வேண்டும். ஆனால் ஆங்கிலம் கூடாது என  கூறுகின்றனர். அதுபோன்ற தலைவர்களிடம், உங்களது குழந்தைகள் எங்கே  படிக்கிறார்கள் என மக்கள் கேட்க வேண்டும்.

அமித் ஷா முதல் முதல்வர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள், பிரமுகர்கள் வரை அனைவரது குழந்தைகளை ஆங்கில வழிப் பள்ளிகளுக்கு சென்று யாரும்  ஆங்கிலம் பேசக் கூடாது என கூறுவார்களா. ஏழை விவசாயிகள் மற்றும்  தொழிலாளர்களின் குழந்தைகள் ஆங்கிலம் கற்க வேண்டும் என அவர்கள்  விரும்புவதில்லை. அவர்கள் பண்ணைகளில் இருந்து வெளியேற கூடாது  என்பதற்காக, பெரிய கனவு காண கூடாது என்று ஆங்கிலம் கற்க  வேண்டாம் உங்களிடம் கூறுகிறார்கள்.

இந்தி  படிக்க வேண்டாம் என்று நான் சொல்லவில்லை, நீங்கள் இந்தி, தமிழ் உள்பட அனைத்து இந்திய மொழிகளையும் படிக்க வேண்டும். ஆனால் நீங்கள் உலகத்துடன் பேச வேண்டுமானால், (அமெரிக்கா, ஜப்பான் அல்லது இங்கிலாந்து போன்ற நாடுகள்) இந்தி உதவாது. ஆங்கிலம் உதவும். ஏழை எளிய விவசாயிகளின் குழந்தைகள் அமெரிக்காவுக்கு சென்று, அவர்களது மொழியில் போட்டி போட வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். இதுவே  காங்கிரசின் கருத்து.

கெலாட் அரசாங்கம் 1700 ஆங்கில வழிப் பள்ளிகளைத்  திறந்து 10,000 ஆங்கில ஆசிரியர்களை நியமித்துள்ளது. அசோக் கெலாட் ஜி, இது  குறைவு. ஏனென்றால் ராஜஸ்தானில் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் ஆங்கிலம்  கற்கும் வாய்ப்பு இருக்க வேண்டும். ஒவ்வொரு குழந்தையும் தனது தாய்மொழியில் பேச முடியும் என்றும் உலகம் முழுவதும் பேச முடியும் (ஆங்கிலம்) என்றும் உணர வேண்டும் என்றார்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Exit mobile version