தொலைபேசி நிறுவனங்கள் தங்கள் சேவையின் தரம் குறித்து அறிக்கையைச் சமர்ப்பிக்க, தொலைபேசி ஒழுங்குமுறை ஆணையமான டிராய் (TRAI) உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் செல்போன்களைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துவிட்ட நிலையில், சேவையின் தரம் குறித்து தொடர்ச்சியாக, புகார்கள் குவிக்கின்றன. குறிப்பாக, அழைப்பு பாதியில் துண்டிக்கப்படுவது, சிக்னல் கிடைக்காமல் இருப்பது, கட்டண குளறுபடி போன்ற பிரச்சனைகள் அதிகளவில் உள்ளன. இந்த நிலையில், செல்போன் சேவை நிறுவனங்கள், தங்கள் சேவையின் தரம் குறித்து மாநில வாரியாக அறிக்கை வழங்க, டிராய் உத்தரவிட்டுள்ளது.
செல்போன் சேவை தரம் குறித்த கட்டுப்பாடுகளை மேலும் கடுமையாக்கவும், டிராய் திட்டமிட்டுள்ளது. அழைப்புகள் பாதியில் துண்டிக்கப்படும் பிரச்சனைக்கு நிர்வாக ரீதியாகவும், அடிப்படையாக உள்ள சில சிக்கல்களும் தான் காரணம் என்றும் இந்திய செல்போன் சேவை நிறுவனங்களின் சங்கம் தெரிவித்துள்ளது.
