முகப்பு அண்மை செய்திகள் அஜித்தின் துணிவால், கொண்டாட்டத்தில் அவரது ரசிகர்கள் பட்டாளம்!

அஜித்தின் துணிவால், கொண்டாட்டத்தில் அவரது ரசிகர்கள் பட்டாளம்!

தமிழ் சினிமாவில் கொடிகட்டிப் பறக்கும் முன்னிலை நடிகர்களில் முதன்மையானவராக வலம் வந்துகொண்டிருக்கும் அஜித், நடித்துள்ள துணிவு படத்தில், 2-வது பாடல் தற்போதைய நிலையில் அறிவிக்கப்பட்டு உள்ளது. 

டைரக்கடர் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள படம் துணிவு. இதில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். போனி கபூர் தயாரித்துள்ள இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளது. ‘துணிவு’ திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகைக்கு, ரசிகர்களுக்கு விருந்து படைக்க உள்ளதாக, படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

சமீபத்தில் ‘துணிவு’ படத்தின் முதல் பாடலான ‘சில்லா சில்லா’ பாடல் வெளியிடப்பட்து. ஜிப்ரான் இசையில் அனிரூத் பாடிய அந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனால், படத்தை எப்போது ரிலீஸ் செய்வார்கள் என ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில் துணிவு படத்தின் 2-வது பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி ‘காசேதான் கடவுளடா’ என்ற பாடல் (18.12.2022) வெளியாகிறது. இதற்கான படக்குழுவினர், ஒரு புதிய போஸ்டரை பகிர்ந்து தெரிவித்துள்ளனர். இது அஜித் ரசிகர்கள் மத்தியில் மட்டற்ற மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருப்பதால், அவர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Exit mobile version