நடிகர் அஜித் நடிப்பில் வெளியாக தயார் நிலையில் உள்ள படம் ‘துணிவு‘. இப்படத்தின் புதிய அப்டேட் ஒன்று வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. இயக்குனர் வினோத் இயக்கத்தில் அஜித் மூன்றாவது முறையாக இணைந்துள்ள படம் ‘துணிவு‘. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை மஞ்சு வாரியர் நடித்துள்ளார்.
மேலும், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், ஜான் கொக்கன், வீரா, உள்ளிட்டர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனார். இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். பொங்கலுக்கு படம் வெளியாக உள்ள நிலையில் அடுத்தடுத்த புதிய அப்டேட்களை இப்படக்குழு வெளியிட்டு வருகின்றனார்.
இந்த படத்தில் இருந்து ‘சில்லா சில்லா, காசேதான் கடவுளடா‘ பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில் 26.12.2022 அன்று மூன்றாவதாக கேங்க்ஸ்டா பாடல் வெளியானது. இப்பாடல் 24-மணி நேரத்தில் கிட்டத்தட்ட 40 லட்சம் பார்வைகளை நெருங்கி வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இந்த படத்தை வெளிநாடுகளில் வெளியிடும் லைகா நிறுவனம் அங்கு புரமோஷனை அமர்க்களப்படுத்தி வருகிறது.
வானத்தில் இருந்து குதித்து சாகசம் செய்யும் ஸ்கை டைவிங் குழுவினர் துபாயில் விமானத்தில் இருந்து துணிச்சலாக குதித்து துணிவு படத்தின் அப்டேட் டிசம்பர் 31-ல் வெளியாகும் என அறிவித்துள்ளனர். இதை வைத்து பார்க்கையில் அன்றைய தினம் படத்தின் டீசர் அல்லது டிரைலர் வெளியாகும் என எதிர் பார்க்கப்படுகிறது. துணிவு படத்தின் இந்த துணிச்சலான புரமோஷனை அஜித் ரசிகர்கள் வைரலாக்கி டிரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர்.
