ஷ்ரத்தா வால்கர் கொலை வழக்கு தொடர்பாக டெல்லி காவல்துறையால் மெஹ்ராலி வனப்பகுதியில் மீட்கப்பட்ட எலும்புத் துண்டுகளிலிருந்து எடுக்கப்பட்ட டிஎன்ஏ மாதிரிகள் அவரது தந்தையின் மாதிரிகளுடன் ஒத்துப்போவதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
டெல்லியில் கடந்த மே மாதம் ஷ்ரத்தா வால்கர் (28) என்ற பெண் 35 துண்டுகளாக உடலை வெட்டி கொல்லப்பட்ட சம்பவத்தில் காதலன் அஃப்தாப் கைது செய்யப்பட்டார். மும்பையில் ஒன்றாக வேலை பார்த்து வந்தபோது இருவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. ஆனால், இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் டெல்லிக்கு வந்தவர்கள் தனியாக வீடெடுத்து லிவிங் டு கெதர் முறையில் வாழ்ந்து வந்தனர்.
அப்போது ஏற்பட்ட சண்டையில் ஷ்ரத்தாவை கொலை செய்துவிட்டு அவரது உடலை 35 துண்டுகளாக வெட்டி அதை பல்வேறு நாட்களில் அஃப்தாப் அப்புறப்படுத்தியுள்ளார்.
வாக்கரின் உடல் உறுப்புகளை தேடுகின்றனர். அவர் கழுத்தை நெரித்து, அவரது உடலை 35 துண்டுகளாக வெட்டி தேசிய தலைநகரின் பல்வேறு பகுதிகளில் அவரது லிவ்-இன் பார்ட்னர் ஆப்தாப் அமின் பூனவல்லாவால் அப்புறப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், மெஹ்ராலி வனப்பகுதியில் மீட்கப்பட்ட எலும்புத் துண்டுகளிலிருந்து எடுக்கப்பட்ட டிஎன்ஏ மாதிரிகள் அவரது தந்தையின் மாதிரிகளுடன் ஒத்துப்போவதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
