முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தொடங்கிய ஒற்றுமை பாதயாத்திரை, இன்று டெல்லியில் நுழைகிறது. இதில், நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் பங்கேற்கிறார்.
ஒற்றுமை யாத்திரையை, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கன்னியாகுமரியில் தொடங்கி கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா உள்பட பல்வேறு மாநிலங்களுக்கு சென்றார். அப்போது அவருக்கு கட்சியினரும், பொதுமக்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இந்நிலையில், இந்த ஒற்றுமை யாத்திரை இன்று அரியானா மாநிலம் பரிதாபாத்தில் உள்ள என்ஏச்பிசி மெட்ரோ நிலையத்தில் இருந்து தலைநகர் டெல்லிக்கு நுழைந்தது. தொடர்ந்து, டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் பொதுமக்களிடம் பேசினார். அப்போது அவர் பேசியதாவது.
நமது ஒற்றுமை யாத்திரையை பற்றி சிலர் வெறுப்பை பரப்புகிறார்கள். ஆனால் நாட்டின் சாமானிய மக்கள் இப்போது அன்பைப் பற்றி பேசுகிறார்கள். ஒவ்வொரு மாநிலத்திலும் லட்சக்கணக்கான மக்கள் யாத்திரையில் கலந்து கொண்டனர் என்றார்.
