முகப்பு சினிமா மாளவிகா மோகனன் விமர்சனத்திற்கு, பதிலடி கொடுத்த நயன்தாரா!

மாளவிகா மோகனன் விமர்சனத்திற்கு, பதிலடி கொடுத்த நயன்தாரா!

கதாநாயகியை மையமாக வைத்து இயக்கப்படும் படங்களுக்கு  முக்கியத்துவம் கொடுத்து, நடித்து மக்களிடத்தில் தனி வரவேற்பை பெற்று இன்றுவரை முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார்  நயன்தாரா.

புதுமுக நடிகைகள் மட்டுமல்லாமல், ஏற்கெனவே நடித்துக் கொண்டிருக்கும் நடிகைகள் கூட, இவரை ஒரு முன் உதாரணமாக கொண்டு, நயன்தாரா எப்படி படங்களை தேர்வு செய்கிறார் என்பதை தெரிந்துகொண்டு, அதே பாணியில் அவர்களும் கதைகளை தேர்வு செய்து நடித்து வருகின்றனர். இந்த நிலையில் மீண்டும் நயன்தாரா நடித்துள்ள ‘’கனெக்ட்’’படம் திரைக்கு வந்துள்ளது.

இந்த படத்தின் ப்ரமோசனுக்காக ஒரு  சேனலில் பேட்டி அளித்திருந்தார் நயன்தாரா. அப்போது, தான் திரைப்பட விழாக்களில் கலந்து கொள்ளாதது ஏன்?  என்பது குறித்து அவர் கூறுகையில், ’’ஆரம்ப காலத்தில் நான் எந்த பட விழாக்களுக்கு சென்றாலும் ஹீரோக்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்துவிட்டு, என்னை ஓரமாக நிற்க வைத்து விடுவார்கள். அதன் காரணமாகவே எந்த ஒரு நிகழ்ச்சியிலும் நான் கலந்து கொள்வதில்லை’’ என கூறினார் நயன்தாரா.

மேலும், நடிகை மாளவிகா மோகனன், முன்பு கொடுத்த பேட்டி ஒன்றில் நயன்தாராவை விமர்சித்திருந்தார். அதாவது, ‘’ஒரு படத்தில் மருத்துவமனை காட்சியில் நடித்தபோது முழு மேக்கப்புடன் தலை முடிகள் கூட கலையாமல் நயன்தாரா நடித்தார்’’ எனத் தெரிவித்திருந்தார்.

மாளவிகா மோகனனின் விமர்சனத்திற்கும், இந்தப் பேட்டியில் நயன்தாரா விளக்கம் கொடுத்திருக்கிறார். அதாவது, ‘’நான் நடிப்பது கமர்ஷியல் படம் என்பதால் தான் அப்படி நடித்தேன்.  கமர்ஷியல் படத்தில் ஒரு ஹீரோயின் தலையை விரித்து போட்டுக் கொண்டெல்லாம் மருத்துவமனைக்கு செல்ல முடியாது.  அதன் காரணமாகவே நான் அந்த படத்துக்கு தேவையான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தேன்’’ எனத் தெரிவித்து, மாளவிகா மோகனனின் விமர்சனத்துக்கு தற்போது பதிலடி கொடுத்திருக்கிறார் நயன்தாரா.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Exit mobile version