முகப்பு அண்மை செய்திகள் பிரிட்டிஷ் கால செட் அமைத்து உருவாகிவரும் ‘ஜாக்சன் துரை 2‘

பிரிட்டிஷ் கால செட் அமைத்து உருவாகிவரும் ‘ஜாக்சன் துரை 2‘

சத்யராஜ், சிபிராஜ் மற்றும் பிந்து மாதவி நடித்து கடந்த 2016-ம் ஆண்டு வெளியான படம், ‘ஜாக்சன் துரை‘. இதை பி.வி.தரணிதரன் இயக்கியிருந்தார். இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகிவருகிறது. படத்தை ஸ்ரீ கிரீன் புரொடக்ஷன்ஸ் நிறுவனமும் ஐ ட்ரீம் ஸ்டூடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது.

இதில், சத்யராஜ், சிபிராஜுடன் சம்யுக்தா, மனிஷா ஐயர், சரத் ரவி உட்பட பலர் நடிக்கின்றனர். சித்தார்த் விபின இசையமைக்கிறார். கல்யாண் வெங்கட்ராமன் ஒளிப்பதிவு செய்கிறார். 1940-ல் ஊட்டி அருகிலுள்ள கிராமம் ஒன்றின் பின்னணியில் கதை நடக்கிறது. பிரிட்டிஷ் கால கட்டத்தைக் கொண்டு வர, அக்காலக்கட்டத்தில் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் மற்றும் கட்டிடங்கள் போல செட் அமைத்து படமாக்கவுள்ளனர்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Exit mobile version