முகப்பு அண்மை செய்திகள் சேலம் அருகே வேற்று கிரகவாசிகளின் படையெடுப்பா? – செம சர்ப்ரைஸ்!

சேலம் அருகே வேற்று கிரகவாசிகளின் படையெடுப்பா? – செம சர்ப்ரைஸ்!

காலம் ஜெட் வேகத்தில் ஓடிக்கொண்டே இருக்கின்றன. ஆம்… நேற்று பிறந்ததுபோல் இருந்த 2022-ம் ஆண்டு மின்னல் வேகத்தில் தன் ஓட்டத்தை முடித்து, இப்போது 2023-ம் ஆண்டுக்குள் அடியெடுத்து வைத்துவிட்டோம்.

2023-ம் ஆண்டை வரவேற்கும் புத்தாண்டு கொண்டாட்டத்தை மக்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். வான வேடிக்கைகள் ஒருபுறம், வாழ்த்து செய்திகளின் பரிமாற்றம் மறுபுறம் என உற்சாகம் கரைபுரண்டு ஓடிவருகிறது.

இந்த நிலையில், புதிய ஆண்டு பிறப்பதற்கு முன்பாக சேலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வானில் நிகழ்ந்த அதிசயம் பெரும் கவனம் பெற்றுள்ளது. அதாவது நட்சத்திரங்கள் ரயில் பெட்டிகள் போன்று வரிசையாக தோன்றியதுடன், அவை ஓரே இடத்தில் நிற்காமல் நகர்ந்து சென்றிருக்கின்றன. குறிப்பாக தாரமங்கலம், ஓமலூர், காடையாம்பட்டி, ஏற்காடு, குப்பனூர், அயோத்தியாபட்டினம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மக்கள் பார்த்து ஆச்சரியத்தில் ஆழ்ந்திருக்கின்றனர்.

அதுமட்டுமில்லாமல், அவற்றை சிலர் செல்போன்களில் படம்பிடித்து சமூக வலைத்தளங்களில் தட்டிவிட்டு, வைரலாக்கி வருகின்றனர். இது பல்வேறு கேள்விகளை எழுப்புகின்றன. இந்த வெளிச்சம் ’ஸ்டார் லிங்’ செயற்கைகோள்களா? இல்லை வேறு ஏதேனும் மர்ம பொருட்களா? வேற்று கிரகவாசிகளின் படையெடுப்பா? நட்சத்திரங்களின் நகர்வா? என்றெல்லாம் எண்ணத் தோன்றுகிறது.

இருப்பினும் விண்வெளி ஆய்வாளர்கள் உறுதி செய்யும் வரை நாமாக எதையும் முடிவு செய்துவிட முடியாது.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Exit mobile version