முகப்பு அண்மை செய்திகள் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வரும் பிரபல நடிகை

குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வரும் பிரபல நடிகை

தமிழில் 90 காலக்கட்டத்தில் பிரபல நடிகையா வலம் வந்தவர் நடிகை அபிராமி. இவர் ‘வானவில், விருமாண்டி, சமுத்திரம், சார்லி சப்லின், 36 வயதினிலே‘ போன்ற படங்களில் நடித்துள்ளார். இடையில் சிலகாலம் சினிமாவை விட்டு விலகியவர் தற்போது மீண்டும் படங்களில் நடித்து வருகிறார். ராகுல் என்பவரை திருமணம் செய்த நிலையில் பெண் குழந்தை ஒருவரை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.

இதுபற்றிய தகவலை அன்னையர் தினமான நேற்று அறிவித்துள்ளார். அவரின் மகள் மற்றும் கணவருடன் இருக்கும் போட்டோக்களை பகிர்ந்து அபிராமி வெளியிட்ட பதிவில், “நானும் ராகுலும் கடந்தாண்டு கல்கி என்ற பெண் குழந்தையை தத்தெடுத்தோம். அப்போது முதல் எங்கள் வாழ்க்கை அழகாக மாறியது. அன்னையர் தினத்தில் ஆசீர்வதிக்கப்பட்டவராக நான் கருதுகிறேன். அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்“, என குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Exit mobile version