முகப்பு அண்மை செய்திகள் கம்போடியா தீவிபத்தில் 19 பேர் உயிரிழப்பு – 60 பேர் காயம்

கம்போடியா தீவிபத்தில் 19 பேர் உயிரிழப்பு – 60 பேர் காயம்

கம்போடியோவில் உள்ள ஓட்டல் கேசினோவில் ஏற்பட்ட தீ விபத்தில் 19 பேர் உயிரிழந்தனர். 60 பேர் காயமடைந்தனர்.

புதன்கிழமை நள்ளிரவில் தொடங்கிய தீ, 12 மணி நேரத்திற்குப் பிறகு மதியம் 2 மணியளவில் அணைக்கப்பட்டது. இந்த தீவிபத்தில் இதுவரை 19 பேர் உயிரிழந்தனர். 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும், மேலும் பலர் இடிபாடுகளுக்குள் சிக்கி இருப்பதாகவும் நம்பப்படுகிறது.

தீ விபத்தில் சிக்கிய மக்கள் கூரையில் இருந்து குதிக்கும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.

முதற்கட்ட விசாரணையில், புத்தாண்டு விடுமுறை அலங்காரங்கள் அதிக மின்சாரத்தை இழுத்ததால், கம்பிகள் அதிக வெப்பமடைந்து தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது.

இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் தாய், சீனா, மலேசியா, வியட்நாம் மற்றும் கம்போடியா உட்பட பல நாடுகளை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது. புதன்கிழமை தீ விபத்து ஏற்பட்ட போது 500 ஊழியர்களும், ஆயிரம் வாடிக்கையாளர்களும் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Exit mobile version