தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், குன்னூரில் மண் சரிவு ஏற்பட்டது. இதையொட்டி மலை ரயில் ரத்து செய்யப்பட்டது.
நீலகிரி மாவட்டத்தில் நேற்று இரவு (டிச 14) கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் ஆறாக ஓடியது. பொதுமக்கள் வீட்டில் இருந்து வெளியே வரமுடியாமல் தவித்தனர். தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் மழைநீர் புகுந்ததால், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் சாலையில் நிறுத்தப்பட்ட வாகனங்கள், மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. குன்னூரில் ஆங்காங்கே மண் சரிவு ஏற்பட்டு, மரங்கள் முறிந்து விழுந்தன. மலை ரயில் பாதையில் 11 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டதால், மலை ரயில் போக்குவரத்து நாளை (டிச.16) வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
