ஐம்மு காஷ்மீர் மாநிலத்தில் காலை ராணுவ வீரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இரண்டு பொதுமக்கள் கொல்லப்பட்டனர் மற்றும் ஒருவர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஐம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாகிஸ்தான் ராணுவத்தினரும் பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகளும் அத்து மீறி நமது நிலைகள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு நமது வீரர்களும் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்தில் இன்று காலை ராணுவ வீரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இரண்டு பொதுமக்கள் கொல்லப்பட்டனர் மற்றும் ஒருவர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இராணுவத்தில் போர்ட்டர்களாக பணிபுரிந்ததாக கூறப்படும் பாதிக்கப்பட்டவர்கள் காலை 6.15 மணியளவில் மாவட்டத்தில் உள்ள இராணுவ முகாமின் ஆல்பா வாயிலை நெருங்கிக் கொண்டிருந்தபோது அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
ரஜோரியில் வசிக்கும் ஷாலிந்தர் குமார் மற்றும் கமல் கிஷோர் ஆகியோர் துப்பாக்கிச் சூட்டில் இறந்ததாகவும், மற்றொருவர் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
