முகப்பு சினிமா ஆயில் மசாஜ் எடுத்துக் கொண்டதால் நடிகர் எஸ். வி. சேகருக்கு ஏற்பட்ட விபரிதம்!

ஆயில் மசாஜ் எடுத்துக் கொண்டதால் நடிகர் எஸ். வி. சேகருக்கு ஏற்பட்ட விபரிதம்!

1980-களில் கதாநாயகனாக பல படங்களில் நடித்து அசத்தியவர் எஸ்.வி.சேகர். அதன்பிறகு காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருபவர். மேலும் அரசியலிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். அதோடு அவ்வப்போது சர்ச்சையான கருத்துகளை வெளியிட்டு சில சிக்கல்களிலும் சிக்கிக்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள ஒரு பதிவு பலருக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது உடல் வலி மற்றும் உடல் உஷ்ணத்தை குறைப்பதற்கு பலரும் ஆயில் மசாஜ் செய்வது வழக்கமான ஒன்றாக உள்ளது. அதேபோல் தான் எஸ்.வி.சேகரும் சமீபத்தில் ஆயில் மசாஜ் செய்து இருக்கிறார்.

அதனால் அவருக்கு கடுமையான உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை ஆர்.ஏ.புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின்பு குணமடைந்துள்ளார் எஸ்.வி.சேகர். எனவே அவர் வெளியிட்டுள்ள செய்தியில், ’’இனிமேல் ஆயில் மசாஜ் எடுத்துக் கொள்ளவே மாட்டேன்’’ என்று தெரிவித்திருக்கிறார். இதனால் எஸ்.வி.சேகர் வெளியிட்ட பதிவினால் ஆயில் மசாஜ் எடுத்துக்கொள்ளும் நபர்களுக்கு புதிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Exit mobile version