நடப்பாண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசுக்கு 305 பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக நோபல் பரிசு தேர்வுக் குழு அறிவித்துள்ளது.
2023-ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசுக்கு பெயர்களைப் பரிந்துரைச் செய்வதற்கான இறுதிக் கெடு கடந்த பிப்ரவரி 1-ம் தேதியுடன் நிறைவுப் பெற்றது. அந்த தேதிக்குள் 305 பெயர்கள் நோபல் பரிசுக்கு பரிந்துரைச் செய்யப்பட்டுள்ளனர்.
அதில், 212 நபர்களின் பெயர்களும், 93 அமைப்புகளின் பெயர்களும் இடம் பெற்றுள்ளதாக நோபல் பரிசுத் தேர்வுக் குழு அறிவித்துள்ளது. தொடர்ந்து எட்டு ஆண்டுகளாக அமைதிக்கான நோபல் பரிசுக்கு 300-க்கும் அதிகமான பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டு வருகின்றன.
அமைதிக்கான நோபல் பரிசைப் பெறுவது, சர்வதேச அளவில் மிகப்பெரிய கவுரவமாகப் பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
